ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மெந்தாரி கோர்ட் குடியிருப்பாளர்களுக்கு வார இறுதியில் தடுப்பூசி செலுத்தப்படும்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 1- கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்ட பி.ஜே.எஸ். 8 மெந்தாரி கோர்ட் குடியிருப்பு பகுதியில் இவ்வார இறுதியில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அந்த குடியிருப்பில் உள்ள அந்நிய நாட்டினர் உள்பட அனைவருக்கும் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டப் பின்னர் வரும் ஞாயிற்றுக் கிழமை தொடங்கி  தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்று பெட்டாலி மாவட்ட அதிகாரி டத்தோ ஜோஹரி அனுவார் கூறினார்.

அப்பகுதியில் தொடர்ந்து அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்படாத மெந்தாரி கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநில அரசும் மாநில சுகாதாரத் துறையும் இணக்கம் தெரிவித்துள்ளன என்றார் அவர்.

நோய்த் தொற்று பரவல் அதிகரித்த காரணத்தால் மெந்தாரி கோர்ட் குடியிருப்பில் 14 நாட்களுக்கு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப் பட்டுள்ளது.


Pengarang :