ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

நாட்டில் இன்று 6,387 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் 2,610 நேர்வுகள்

ஷா ஆலம், ஜூலை 5– நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று எண்ணிக்கை கடந்த ஒரு வார காலமாக ஆறாயிரம் என்ற அளவில் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6,387 நோய்த் தொற்று சம்பவங்களை நாடு பதிவு செய்துள்ளது.

நேற்று பதிவான 6,045 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது 342 நேர்வுகள்  அதிகமாகும் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இன்றயை நேர்வுகளுடன் சேர்த்து நாட்டில் அந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  785,039 ஆக அகரித்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலாங்கூரில் 2,610 சம்பவங்களும் கோலாலம்பூரில் 819 சம்பவங்களும் நெகிரி செம்பிலானில் 523 சம்பவங்களும் சரவாவில் 424 சம்பவங்களும் ஜொகூரில் 324 சம்பவங்களும் இன்று பதிவானதாக அவர் தெரிவித்தார்.

பகாங் (321). கெடா (273), சபா (263), மலாக்கா (206), பினாங்கு (157), கிளாந்தான் (114), லபுவான் (71), புத்ரா ஜெயா (25), திரங்கானு (17) பெர்லிஸ் (0), ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலையில் உள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :