HEALTHMEDIA STATEMENTNATIONALPBT

தடுப்பூசி பெறுவோரின் விழுக்காடு குறைவுக்கு சிலாங்கூரின் அதிக மக்கள் தொகையே காரணம்- மந்திரி புசார்

ஷா ஆலம், ஜூலை 6- சிலாங்கூரில் தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கை விழுக்காட்டு அளவில் குறைவாக இருப்பதற்கு மாநிலத்தில் உள்ள அதிக மக்கள் தொகையே காரணம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்தைப் பொறுத்த வரை பத்து லட்சம் பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியை இதுவரை பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

எண்ணிக்கை அளவில் பார்த்தால் சிலாங்கூர், சரவா மற்று கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களில் தலா பத்து லட்சம் பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். எனினும், விழுக்காடு ரீதியாக பார்த்தால் இந்த எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும் என்றார் அவர்.

மக்கள் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்ட இந்த அளவீடு பெரியவர்களின் எண்ணிக்கையை காட்டவில்லை. பெரியவர்களின் எண்ணிக்கையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 10 பத்து விழுக்காட்டை எட்டி தற்போது 27 விழுக்காட்டை அடைந்திருக்கும் என்று அவர் சொன்னார்.

கடந்த வாரம் வரை 53,000 தடுப்பூசிகள் மாநில மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டத்தை நாம் கொண்டிருப்பதன் மூலம் 135,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைய முடியும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டத்தையும் சிலாங்கூர் மாநில சுகாதார இலாகாவின் தடுப்பூசித் திட்டத்தையும் அதிகப்படுத்துவதற்கான சாத்தியத்தை ஆராய்ந்து வருகிறோம் என்றார் அவர்.


Pengarang :