HEALTHMEDIA STATEMENTNATIONALPBT

தினசரி 5,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் மையம் கே.எல்.ஐ.ஏ.வில் திறப்பு

சிப்பாங், ஜூலை 6- நாளொன்றுக்கு 5,120 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வசதி கொண்ட மாபெரும் மோவென்பிக் கே.எல்.ஐ.ஏ. தடுப்பூசி மையம் நேற்று முதல் செயல்படத் தொடங்கியது.

சிப்பாங்  வட்டார மக்கள் தடுப்பூசி  பெறுவதற்கான பிரதான மையமாக இது விளங்கும் என்று மோவென்பிக் கே.எல்.ஐ.ஏ. தடுப்பூசி மையத்தின் நிர்வாகி டாக்டர்  நோராஸியா அப்துல் கரிம் கூறினார்.

இந்த மாபெரும் தடுப்பூசி மையம் காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும் என்று அவர் சொன்னார். இவ்வாண்டு இறுதி வரை இம்மையம் செயல்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சு, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளதாக அவர்  தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்தும் பணி சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக இரு மண்டபங்கள் தயார் படுத்தியுள்ளோம். தடுப்பூசி செலுத்த வருவோர் மற்றும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோரின் வசதிக்காக சிறப்பு விரைவு வழித்தடங்களையும் ஏற்படுத்தியுள்ளோம் என்றார் அவர்.

நோய்த் தொற்று பரவலுக்கு ஹாஜ் யாத்திரிகர்களால் நிரம்பியிருந்த இந்த இடம் தற்போது கோவிட்-19 நோயாளிகள் நிறைந்த இடமாக மாறிவிட்டது என்று மோவென்பிக் ஹோட்டல் கான்வென்ஷன் சென்டர் தலைமை நிர்வாகி வான் என்டேரி முகமது சஹாட் கூறினார்.

 


Pengarang :