ECONOMYHEALTHNATIONALPBT

சிலாங்கூரில் நோய்த் தொற்று உயர்வுக்கு கோவிட்-19 பரிசோதனை நடவடிக்கையே காரணம்

புத்ரா ஜெயா, ஜூலை 10– சிலாங்கூரில் அண்மைய தினங்களாக கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரித்ததற்கு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தீவிர கோவிட்-19 பரிசோதனை நடவடிக்கையே காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

இம்மாதம் 5ஆம் தேதி 19,614 பேருக்கும் 6ஆம் தேதி 25,005 பேருக்கும் கோவிட்-19  பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட வேளையில் அதற்கு அடுத்த தினங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பங்கேற்றோர் எண்ணிக்கையும் மேலும் அதிகரித்ததாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ஆடாம் பாபா கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று 4,400 கோவிட்-19 சம்பவங்களும் நேற்று முன்தினம் 4,142 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியிலும் பி.கே.பி.டி. பகுதிகளில் பரிசோதனை கொள்வதிலும் நாங்கள் தீவிரம் காட்டி வருகிறோம் என்றார் அவர்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவற்கான வியூகங்களை வரைவது தொடர்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றும் மேலும்  பரவுவதை தடுக்கும் நோக்கில் பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்  சொன்னார்.


Pengarang :