Gunarajah R. George
ECONOMYHEALTHNATIONALPBT

“நாடி“ வர்த்தக கடனுதவித் திட்டத்தின் வாயிலாக 773 பயன் பெற்றனர்

ஷா ஆலம், ஜூலை 12- “நாடி“ எனப்படும் ஸ்கிம் நியாகா டாருள் ஏசான் திட்டத்தின் வாயிலாக கடந்த ஆறு மாத காலத்தில் 773 பேர் பயனடைந்துள்ளனர். 

கடந்த ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 31 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி அவர்களுக்கு  வர்த்தக கடனுதவியாக வழங்கப்பட்டதாக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான  ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

கித்தா சிலாங்கூர் உதவித் தொகுப்பின் வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் வழி இவ்வாண்டில் 613 பேருக்கு உதவிகள் வழங்க நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை தற்போதைய எண்ணிக்கை தாண்டி விட்டதாக அவர் சொன்னார்.

தொடக்கத்தில் நாங்கள் சுமார் 600 பேரை இலக்காக கொண்டு 30 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்திருந்தோம்.எனினும், அந்த இலக்கைத் தாண்டி பொதுமக்களிடமிருந்து இத்திட்டத்திற்க அமோக ஆதரவு கிடைத்துள்ளது என்றார் அவர்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு வருமானம் இழந்த குடும்ப பெண்களை இலக்காக கொண்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

சிறு வணிகர்களுக்கு உதவும் பொருட்டு கித்தா சிலாங்கூர் உதவித் தொகுப்பின் வாயிலாக  மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை தொடக்க நிதியாக கொண்டு இந்த நாடி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் கீழ் சிறு வணிகர்கள் 1,000 வெள்ளி முதல் 5,000 வெள்ளி வரை கடனுதவி பெற முடியும். கடனைச் செலுத்த  6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்ப பாரங்களை அருகிலுள் ஹிஜ்ரா அலுவலகங்களிலும்   என்ற www.hijarahsealangor.com அகப்பக்கம் வாயிலாக பெறலாம். மேல் விபரங்களுக்கு 03-55191692 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :