ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

ஷா ஆலம், ஐ.டி.சி.சி. தடுப்பூசி மையம் மீண்டும் திறக்கப்பட்டது

ஷா ஆலம், ஜூலை 14- பணியாளர்கள் மத்தியில் ஏற்பட்ட கோவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக நேற்று மூடப்பட்ட ஷா ஆலம், ஐ.டி.சி.சி,யில் உள்ள கோவிட்-19 தடுப்பூசி மையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

அந்த மையத்தைச் சேர்ந்த 204 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று கண்டதைத் தொடர்ந்து கிருமி நாசினி தெளிப்பு பணிகளுக்காக அந்த மையம் நேற்று மூடப்பட்டது.

இந்த மையத்திற்கு வருகை புரிந்தோர் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடித்ததோடு இரட்டை முகக் கவசங்களை அணிந்திருந்ததையும் காண முடிந்தது.

இந்த தடுப்பூசி மையம் மூடப்பட்டதை அறிந்து தாம் பெரிதும் ஏமாற்றமடைந்ததாக தடுப்பூசி பெற வந்தவர்களில் ஒருவரான கே.கஜபதிராவ் (வயது 60) கூறினார்.

தடுப்பூசியைப் பெறுவதற்கு நான் கடந்த இரு மாதங்களாக காத்திருந்தேன். தடுப்பூசி மையம் மூடப்பட்டதாக அறிந்தவுடன் தடுப்பூசி பெறுவது தொடர்பான தேதி மாற்றத்தை அறிந்து கொள்வதற்காக நான் மைசெஜாத்ரா செயலியை தொடர்ந்து கவனித்து வந்தேன் என்றார் அவர்.

இருந்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு முகக் கவசங்களை அணிந்து தடுப்பூசி மையத்திற்கு வந்தேன் என்று தனியார் துறை பணியாளரான அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி மையத்தில் உள்ள பணியாளர்களுக்கு நோய்த் தொற்று கண்டதாக வெளி வந்த செய்தி தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக விவியன் (வயது 47) என்ற பெண்மணி கூறினார்.

எனினும், இம்மையத்தில் முழுமையாக கிருமி நாசினி தெளிப்பட்டத் தகவலை கேட்டு தாம் தைரியத்துடன் தடுப்பூசி செலுத்த முன்வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :