ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

ஜூலை 25 வரை சிலாங்கூர் மக்களுக்கு 34.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

ஷா ஆலம், ஜூலை 26- தேசிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் வழி சிலாங்கூர் மாநிலத்தில் இம்மாதம் 25ஆம் தேதி வரை 34 லட்சத்து  50 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இது தவிர, செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் மேலும் 109,547 தடுப்பூசிகள் இம்மாநில மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் மாநில மக்களில் 18.17 விழுக்காட்டினர் அல்லது 863,000 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நாடு முழுவதும் 1 கோடியே 69 லட்சத்து 4 ஆயிரத்து 896 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தனது  டிவிட்டர் பதிவின் வழி கூறியிருந்தார்.

மொத்தம் 53 லட்சத்து 97 ஆயிரத்து 826 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 1 கோடியே 15 லட்சத்து 7 ஆயிரத்து 070 பேர் தங்களின் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் நாட்டில் 417,738 பேருக்கும் சிலாங்கூரில் 113,081 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டன.


Pengarang :