ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

டாமாய் அடுக்குமாடி பகுதியில் பி.கே.பி.டி. நேற்று முடிவுக்கு வந்தது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 26- இங்குள்ள பி.ஜே.எஸ்.8 டாமாய் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அமல்படுத்தப்பட்டிருந்த கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) நேற்று நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவுக்கு வந்தது.

இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எட்டு நாட்களில் முடிவுக்கு வந்ததை குடியிருப்பாளர்கள் கைப்பேசி விளக்கு ஒளியை அசைத்து கொண்டாடினர்.

மேலும், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலிகளை இராணுவ வீரர்கள் அகற்றிய போது குடியிருப்பிலுள்ள ஒட்டு மொத்த மக்களும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பிய தங்களின் “விடுதலை“யை வரவேற்றனர்.

இத்தருணத்தில் அந்த குடியிருப்பில் பட்டாசு சத்தமும் இடைவிடாது ஒலித்த வண்ணம் இருந்தது. ஆயினும், இந்நிகழ்வுகள் அனைத்தையும் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளின் படிக்கட்டுகளில் இருந்தவாறு மட்டுமே மேற்கொண்டனர்.

டாமாய் குடியிருப்பில் கடந்த 18 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட பி.கே.பி.டி. ஆணை முன்கூட்டியே அகற்றப்படுவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முன்னதாக கூறியிருந்தார்.

அந்த குடியிருப்பைச் சேர்ந்த 1,279 பேருக்கு கடந்த 23 மற்றும் 24ஆம் தேதிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்டதை விட ஆறு நாட்களுக்கு முன்னதாகவே அங்கு பி.கே.பி.டி. ஆணை அகற்றப்பட்டுள்ளது.

 


Pengarang :