ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாடாளுமன்றக் கட்டிடத்தில் அனைத்துக் கூட்டங்களையும் ஒத்தி வைக்க வேண்டும்- நோர் ஹிஷாம் கோரிக்கை

கோலாலம்பூர், ஆக 2– நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெறக் கூடிய கூட்டத் தொடர், தேர்வுக் குழு மற்றும் நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு உள்ளிட்ட அனைத்து கூட்டங்களும் கடந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கி இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் வலியுறுத்தியுள்ளார்.

நடப்பு இடர் மதிப்பீட்டின் அடிப்படையிலும் தற்போது நாடாளுமன்றத்தில் பரவி வரும் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளதாக அவர் சொன்னார்.

நாடாளுமன்றத்தில் இடர் மதிப்பீடு தொடர்பான ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 26 ஆம் தேதி நாடாளுமன்றக் கட்டிடத்தில் இருந்த அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு மைசெஜாத்ரா செயலி வாயிலாக உடல் நிலை குறித்து பதிவு செய்ய வேண்டும் என்பதோடு நோய்க்கான அறிகுறி தென்படும் பட்சத்தில் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றக் கட்டிடத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவுவதற்கு பல்வேறு அம்சங்கள் காரணமாக விளங்குவதாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

முழுமையாக மூடப்பட்டிருக்கும் கட்டிடத்தின் வடிவமைப்பு நோய்த் தொற்றுக்கான சாத்தியத்தை அதிகரிக்கும் எனக் கூறிய அவர், பல மணி நேரத்திற்கு காற்று நிலையாக இருக்கும் இடத்தில் சார்ஸ் கோவி-2 வைரஸ் எளிதில் பரவுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது என்றார்.


Pengarang :