ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கிள்ளான் கவுன்சிலர் ஆதி சரவணன் ஏற்பாட்டில் பண்டமாரானில் கிருமி நாசினி தெளிப்பு

கிள்ளான், ஆக 4- கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் ஆதி சரவணன் ஏற்பாட்டில்  கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை பண்டமாரான் தொகுதியில் கடந்த தினங்களாக மேற்கொள்ளப்பட்டன.

கோலக் கிள்ளான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அண்மைய காலமாக கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலும் அதனால் மரணச் சம்பவங்களும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த கிருமி நாசினி தெளிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

குடியிருப்பு பகுதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களை மையமாகக் கொண்டு இந்த கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கிருமி நாசினி தெளிப்பு பணிக்கு  பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் மற்றும் கிள்ளான் நகராண்மைக் கழக சுகாதாரப் பிரிவு இயக்குநர் அஸ்மி சுஜி ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்கினர்.

இந்த நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு பெரிதும் துணை புரிந்த தன்னார்வலர்கள் மற்றும் கிருமி நாசினி தெளிப்பு பணிக்கு தேவைப்பட்ட 6,000 லிட்டர் நீரை வழங்கி உதவிய ஆயர் சிலாங்கூர் நிறுவனம் ஆகிய தரப்பினருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஆதி சரவணன் கூறினார்


Pengarang :