ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

தீவிர நடவடிக்கைகளால் சிலாங்கூரில் கோவிட்-19 எண்ணிக்கை சரிவு

ஷா ஆலம், ஆக 4- கோவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் செல்வேக்ஸ் தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட  தீவிர நடவடிக்கைகள் சிலாங்கூரில் கடந்த நான்கு நாட்களாக கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்தியது நோய்ப் பரவல் சற்று தணிவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்றார்.

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிக்கான சிறப்பு பணிக்குழுத் தலைவர் டத்தோ டாக்டர் சோங் சீ கியோங் கூறியிருந்தது போல் ஆகஸ்டு மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் நோய்த் தொற்று சரிவடைவதை காண முடியும். அதன் பின்னரே சிலாங்கூர் தேசிய மீட்சித் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற இயலும் என்றார் அவர்.

இங்குள்ள மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை 6,400 ஆகவும் ஞாயிற்றுக்கிழமை 6,326 ஆகவும்


Pengarang :