ECONOMYHEALTHNATIONALPBT

செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் ஜெரம் தொகுதியில் 600 பேருக்கு தடுப்பூசி

கோல சிலாங்கூர், ஆக 4- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ் ஜெரம் தொகுதியை சேர்ந்த சுமார் 600 பேர் தடுப்பூசி பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்தோர் மற்றும் பண்டார் பாரு கோல சிலாங்கூர், எம்.டி.கே.எஸ். மண்டபத்தில்  உள்ள தடுப்பூசி மையத்திற்கு தடுப்பூசி பெற நேரில் வந்தவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இவ்வாறு மதிப்பிடப்படுவதாக தடுப்பூசி திட்ட இயக்குனர் நாயிம் முகமது ரானி கூறினார்.

நேற்று மாலை 3.00 மணி வரை உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் உள்பட 300 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்றதாக அவர் சொன்னார்.

இதனிடையே,  உருமாறிய  கோவிட்-19 நோய்த் தொற்று மீதான அச்சம் காரணமாக பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதில் அதிக  அக்கறை காட்டி வருவதாக ஜெரம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் நக்முடின் ஹூசேன் கூறினார். 

தடுப்பூசி மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தாங்கள் வீடு வீடாக பயணம் மேற்கொண்ட போது பொதுமக்களிடமிருந்து தங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Pengarang :