ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 எதிரொலி- 20% நடுத்தர வர்க்கத்தினர் ஏழைகள் ஆனார்கள்

கோலாலம்பூர், ஆக 6- கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக மாதம் 4,850 வெள்ளி முதல் 10,959 வெள்ளி வரை வருமானம் பெற்று வந்த எம்40 எனப்படும் நடுத்தர தரப்பினர் குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவுக்கு தள்ளப்பட்டார்கள்.

அதோடு மட்டுமின்றி, டி20 எனப்படும் அதிக வருமானம் பெறும் தரப்பினரில் 12.8 விழுக்காட்டினர் எம்40 எனப்படும் நடுத்தர வருமானம் பெறும் பிரிவுக்கு கீழிறங்கி விட்டனர்.

2020ஆம் ஆண்டிற்கான மலேசிய குடும்ப வருமானம் மற்றும் ஏழ்மை நிலை மதிப்பீட்டு அறிக்கையின் வழி இவ்விபரம் தெரிய வந்துள்ளதாக தேசிய புள்ளி விபரத் துறையின்  தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்  முகமது உஸீர் மஹிடின் கூறினார்.

டி40 பிரிவினரை விட எம்40 மற்றும் பி40 பிரிவினரின் வருமானம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன. கடந்தாண்டில் எம்40 பிரிவினரின் வருமானம் 15.9 விழுக்காடும் பி40 பிரிவினரின் வருமானம் 36.9 விழுக்காடும் வீழ்ச்சிடைந்துள்ளதாக அவர் சொன்னார்.

அதே சமயம் டி20 தரப்பினரின் வருமானம் கடந்த 2019 ஆம் ஆண்டைக் காட்டிலும் 0.4 விழுக்காடு உயர்ந்து 47.2 விழுக்காடாக ஆகியுள்ளது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றின் விளைவாக கடந்தாண்டில் குடும்ப வருமானம் மற்றும் ஏழ்மை நிலையை மையமாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டில் 7,901 வெள்ளியாக இருந்த குடும்ப வருமானம்  கடந்தாண்டில் 10.3 விழுக்காடு குறைந்து 7,089 வெள்ளியாக ஆனதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Pengarang :