ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிறு வணிகர்களுக்கு உதவ சிலாங்கூர் அரசு 47.2 கோடி வெள்ளி ஒதுக்கீடு 

ஷா ஆலம், ஆக 6- கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு உதவ சிலாங்கூர் அட்வான்ஸ் திட்டத்தின் மூலம் மாநில அரசு 47 கோடியே 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் வாயிலாக மேலும் 20 கோடி வெள்ளி இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பெருந்தொற்று காலத்தில் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் சிலாங்கூர் அட்வான்ஸ மூலம் எளிதான மற்றும் நட்புறவான கடனுதவித் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.

இதன் தொடர்பான மேல் விபரங்களுக்கு  எனும் https://www.selangoradvance.com.my  அகப்பக்கத்தை நாடும் படி சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்  கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பெருந்தொற்று காலத்தில் வர்த்தகர்கள் தாக்குப் பிடித்து நிற்பதற்கும்  தொழில்துறை மற்றும் தொழிலாளர்களைக் காப்பாற்றுவதற்கும் ஏதுவாக 20 கோடி வெள்ளி கூடுதல் நிதியில் சிலாங்கூர் அட்வானஸ் திட்டம் அமல்படுத்தப்படுவதாக மந்திரி புசார் கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.


Pengarang :