ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோல லங்காட்டில் 90,000 பேர்  முதலாவது டோஸ் தடுப்பூசி பெற்றனர்

பந்திங், ஆக 9-  கோல லங்காட் மாவட்டத்தில் இதுவரை 90,000 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக சிஜங்காங் தொகுதி தடுப்பூசி மையத்திற்கான ஒருங்கிணைப்பாளர் ஹைருள் நிஸாம் தோஹார் கூறினார்.

தடுப்பூசி பெறுவதற்கான தகுதி உள்ள 18 லட்சத்திற்கும் ஒரு லட்சம் பேரில் 90 விழுக்காட்டினர் தடுப்பூசி பெற்றுள்ளதை கோவிட்-19 தடுப்பூசி திட்ட நடவடிக்கை குழுவின் தரவுகள் காட்டுவதாக அவர் சொன்னார்.

இன்னும் தடுப்பூசி பெறாதவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் மூலம் தடுப்பூசி பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பந்திங் பாரு எம்.பி.கே.எல். மண்டபத்தில்  நடைபெறும் தடுப்பூசி திட்டத்தின் வழி எஞ்சியுள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழுமத்தை உருவாக்குவதை இலக்காக கொண்டு  உருவாக்கப்பட்ட செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் வெளிநாட்டினர் உள்பட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

Pengarang :