ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

அனைத்துவித உதவிகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறது, கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா (HTAR) மருத்துவமனை

ஷா ஆலம், 21 ஆக: கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா (HTAR) மருத்துவமனையில் கோவிட் -19 நோயாளிகளின் சேர்ப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து MAEPS 2.0 குறைந்த ஆபத்து கோவிட் -19 தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையத்தில் (PKRC) கடன் வாங்கிய 80 யூனிட் ஆக்ஸிஜன் இயந்திரங்களை திருப்பி அளித்துள்ளது.

மலேசிய ஆயுதப் படைகளின் தளவாடப் பிரிவு (ஏடிஎம்), நோயாளிகளின் சேர்ப்பில் கூர்மையான அதிகரிப்பை அனுபவித்து வரும் பிற மாநிலங்களில் பயன்படுத்த  இவ் உபகரணங்களை மறுசீரமைக்கும் என்று HTAR தெரிவித்தது.

இவ் உபகாரணங்களை ‘பேரழிவு’ காலத்தில்  கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு இரவல் வழங்கி உதவிய,  PKRC MAEPS என்னும் குறைந்த ஆபத்து கோவிட்-19 நோயாளி சிகிச்சை மற்றும் தனிமை மையம் இரண்டின்  இயக்குனர் டாக்டர். ஷஹாபுதீன் இப்ராகிமுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன்

 “HTAR க்கு வெளியில் இருந்து வரும் அனைத்துவித உதவிகளுக்கும் ஆதரவும் பெரிதும் பாராட்டப்பட்டு நன்றி தெரிவித்துக் கொள்கிறது” என்று HTAR நேற்று பேஸ்புக்கில் ஒரு அறிக்கையில் கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, HTAR இயக்குனர் டாக்டர் இயக்குனர் டாக்டர் சூல்கர்னையின் முகமாட் ரவி  கோவிட் -19 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு தினசரி சேர்ப்பு முந்தைய வாரத்தை விட 50 சதவிகிதத்திற்கும் மேலாக குறைந்துவிட்டதாக தெரிவித்தார்.

 


Pengarang :