ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் இன்னும் 1436 தொற்று மையங்கள் செயல்படுகின்றன.

ஷா ஆலம், 23 ஆக : நாட்டில் கோவிட்-19 தொற்றுநோய் பரவியதிலிருந்து மொத்தம் 4,442 kluster  என்னும் தொற்று மையங்கள் கண்டறியப் பட்டுள்ளன, அவற்றில் 1,436 இன்னும் செயலில் உள்ளன.

சுகாதார இயக்குநர் ஜெனரல் ஒரு அறிக்கையில், பணியிடங்கள், சமூகங்கள் மற்றும் உயர் -ஆபத்துள்ள குழுக்களை உள்ளடக்கிய மொத்தம் 24 புதிய தொற்று மையம் (கிளஸ்டர்களும்) நேற்று பதிவு செய்யப்பட்டன.

டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா பகிர்ந்துள்ள பிற்சேர்க்கையில், ஜோகூரில் நான்கு பணியிட தொற்று மையம் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், மற்ற மூன்று மலாக்காவில் இருந்ததாகவும் காட்டுகிறது.

கோலாலம்பூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், பேராக் மற்றும் கிளாந்தான் ஆகிய இடங்களில் தலா ஒரு தொற்று மையம் கண்டு பிடிக்கப் பட்டது.

இதற்கிடையில், கிளந்தான், சரவாக் (நான்கு) மற்றும் பகாங் மற்றும் சபாவில் தலா ஒரு சமூகக் தொற்று மையம் கண்டறியப்பட்டன.

சிலாங்கூரில் 26 தொற்றுகளுடன் ஜலான் பெசார் புலாவ் மெரந்தி பூச்சோங்கில் சம்பந்தப்பட்ட அதிக ஆபத்துள்ள தொற்று மையம் கண்டறியப்பட்டது.


Pengarang :