Hutan Simpan Paya Bakau Pulau Ketam diwartakan dan dipelihara semula oleh Jabatan Perhutan Negeri Perlis . Langkah ini meningkatkan pertumbuhan organisma bentos seperti siput, ketam dan sebagainya yang menjadi populasi awal hidup marin di kawasan pantai serta menyediakan makanan kepada burung pantai dan burung laut. Foto: BERNAMA
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை 30 விழுக்காடாக நிலை நிறுத்தும் திட்டத்திற்கு சுல்தான் வரவேற்பு

ஷா ஆலம், ஆக 23– மாநிலத்திலுள்ள நிலப்பகுதியில் 30 விழுக்காட்டை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக நிலை நிறுத்தும் மாநில அரசின் முடிவை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் வரவேற்றுள்ளார்.

பசுமைத் திட்ட அமலாக்கத்திற்கேற்ப மிகப் பொருத்தமான நடவடிக்கையாக இது அமைவதாக சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

மாநிலத்திலுள்ள நிலப்பகுதியில் 31.47 விழுக்காடு அல்லது 250,000 ஹெக்டர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வரும் 2025ஆம் ஆண்டுவாக்கில் 32 விழுக்காட்டு பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக நிலை நிறுத்த மாநில அரசு இலக்கு கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று இங்கு 14 மாநில சட்டமன்றத்தின் 4 ஆம் தவணைக்கான கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

பாதுகாக்கப்பட்ட நிரந்தர வனப்பகுதியை தகுதி மாற்றும் செய்வது தொடர்பில்  பொதுமக்களிடம் கருத்து கேட்கும்  நடைமுறையை அமல் செய்துள்ள நாட்டின் ஒரே மாநிலம் சிலாங்கூர் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாநிலத்தின் பசுமை வளங்களைப் பாதுகாப்பதில் எனது தலைமையிலான அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையையும் உயர்ந்த பட்ச ஈடுபாட்டையும் இது பிரதிபலிக்கிறது என்றார் அவர்.


Pengarang :