ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் மேலும் ஏழு புதிய தொற்று மையம், ஆறு பணியிடங்களை உள்ளடக்கியது

ஷா ஆலம், 24 ஆக:  சிலாங்கூர் இன்று மேலும் ஏழு புதிய கோவிட் -19 தொற்று மையங்களைப் பதிவு செய்தது, அவற்றில் ஆறு பணியிட தொற்று மையங்கள் என பொது சுகாதார இயக்குனர் – டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஒரு அறிக்கையின் மூலம், தெரிவித்தார்.

மீதமுள்ள, ஒரு தொற்று மையம் உயர் -ஆபத்தானது, அதாவது லோரோங் ஹாஜி முகினி  கிள்ளானில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார். ஆறு பணியிடக்  தொற்று மையங்களில்  நான்கு புக்கிட் மக்கோத்தா மற்றும் ஜலான் இண்டஸ்ட்ரி பி/2 ஏ கட்டுமான தளம், உலு லங்காட்டிலும்,  கிள்ளானில் உள்ள ஜாலான் தம்பின் கட்டுமான தளம், மற்றும் கோலா லங்காட் மற்றும் கிள்ளானில் உள்ள ஜாலான் லாபோஹான் ஓலாக் லெம்பிட் கட்டுமான தளம் ஆகியவையாகும்.

இதற்கிடையில், மற்ற இரண்டும் சிப்பாங் மற்றும் பெட்டாலிங்கில் உள்ள ஜாலான் பூச்சோங் காஜாங் தொழிற்துறை தொற்று  மற்றும் பெட்டாலிங், சிபாங் மற்றும் உலு லங்காட்டில் உள்ள மெராந்தி பெர்மை சத்து தொழில் தொற்று ஆகும். இந்த ஏழு தொற்று மையங்களில் 580 நபர்களின் மீது மேற்கொள்ளப் பட்ட சோதனைகளின் முடிவின் மூலம் ஏழு மையங்களில் இருந்து 303 தொற்றுகள்  கண்டறியப்பட்டன.

இன்று, சிலாங்கூரில் 4,645 புதிய கோவிட் -19 தொற்றுகளுடன் 36 இறப்புகளும் பதிவாகியுள்ளன, அதாவது மருத்துவமனையில் 34 இறப்புகள், மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்பு இறந்தனர் என அவரின் அறிக்கை கூறுகிறது.


Pengarang :