KUCHING, 28 Julai — Reaksi Ketua Umum Pakatan Harapan (PH) Datuk Seri Anwar Ibrahim ketika menyampaikan ucapan pada Majlis Makan Malam ‘Harapan Sarawak Baru’ malam ini.?– fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA?
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வயது 18ல் வாக்குரிமை மற்றும் கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தை அமல்படுத்த, புதிய பிரதமரை பக்காத்தான் வலியுறுத்துகிறது

ஷா ஆலம், ஆகஸ்ட் 25: புதிய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் நிர்வாகத்தை 18 வயதில் வாக்களிக்கும் உரிமை வழங்குதல் மற்றும் கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தை அமல்படுத்துமாறு பக்காத்தான் ஹராப்பான் வலியுறுத்தியுள்ளது.

கோவிட் -19 தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களிலிருந்து மக்களை காப்பாற்ற சீர்திருத்த நடவடிக்கைகள் அவசியம் என்று தலைமைத்துவ கவுன்சில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ  மொகிதீன் யாசின் தலைமையிலான முந்தைய அரசாங்கம் கோவிட் -19 பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை.

“ஒரு புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என்பதால், மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக மேலே எழுப்பப்பட்ட பிரச்சினைகளை பிரதமர் பரிசீலிக்க வேண்டும் என்று பக்காத்தான் கருதுகிறது என்று ஒரு கூட்டு அறிக்கையில் கேட்டுக்கொண்டது.

இந்த அறிக்கை பார்ட்டி கெஅடிலான் ராக்யாட் (KEADILAN) தலைவர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராகிம், அமானா தலைவர் முகமது சாபு மற்றும் ஜ.செ.க பொதுச் செயலாளர் லிம் குவான் எங் இணைந்து வெளியிட்டது.

பக்காத்தான் முன்மொழிந்துள்ள மற்ற கொள்கை மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் பின்வருமாறு:

திட்டம் T FTTIS+V  இதை செயல்படுத்துவதன் மூலம் தேசிய மீட்சித் திட்டத்தை மேம்படுத்துதல் (கண்டுபிடி, சோதனை, தடமறிதல், தனிமைப்படுத்தல், ஆதரவு மற்றும் தடுப்பூசி) அதனுடன் பொது சுகாதார அமைப்புக்கு கூடுதல் ஆதரவை உறுதி செய்தல்.

தொழிலாளர்கள், வணிகங்கள் மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு RM45 பில்லியன் நேரடி நிதி ஒதுக்கீடு, தடுப்பூசி மற்றும் வட்டி இல்லா கடன் தவனை நீடிப்பு திட்டம் உட்பட மொத்த உதவியை அதிகரிப்பதன் மூலம் நிதி சீர்திருத்தம்.

நாடாளுமன்ற சேவை ஆணைக்குழு சட்டம் இயற்றுவது- நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் நிறுவன சீர்திருத்தம், நாடாளுமன்றத்தின் நிலை செயல்பாட்டை வலுப்படுத்துதல் மற்றும் எதிர்க்கட்சியின் பங்கை அங்கீகரித்தல்  ஆகியவற்றை பக்காத்தான் முன்வைத்துள்ளது.


Pengarang :