ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

அரசு ஊழியர்கள் மத்தியில் ஊழலைத் தடுக்க 10 திட்டங்கள்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஆக 26- அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் ஊழல் நடவடிக்கைகளிலிருந்து விடுபட்டிருப்பதை உறுதி செய்யும் கடப்பாட்டை சிலாங்கூர் அரசு கொண்டுள்ளதாக  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் ஊழல் நடவடிக்கைளை துடைத்தொழிப்பதற்கு மாநில அரசு ஊழல் தடுப்பு ஆணையத்துடன் இணைந்து பத்து திட்டங்களை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக மாநில சட்டமன்றத்தில் அவர் குறிப்பிட்டார்.

அந்த 10 திட்டங்கள் பின்வருமாறு-

  1. சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில துறைத் தலைவர்கள், அரசு சார்பு நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பாளர்கள் ஊழலுக்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திடுவது
  2. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு சார்பு நிறுவனங்களும் கூட்டங்களில் பங்கேற்பதற்கு முன்னர் சுய நலன் சாராதிருப்பதை உறுதிசெய்யும் பாரத்தில் கையெழுத்திட வேண்டும்
  3. மாநில அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள உயர்நெறி பிரிவு அலுவலகத்தில் எம்.ஏ.சி.சி. உயர்நெறி அதிகாரியை பணியமர்த்துவது
  4. அனைத்து மாநில அரசு துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் உயர் நெறிப் பிரிவு மற்றும் உயர் நெறி அதிகாரிகளை அமர்த்துவது
  5. சிலாங்கூர் அரசு செயலகத்தில் உள் கணக்கு தணிக்கை துறையை உருவாக்குவது
  6. அனைத்து மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளில் ஊழல் இடர் மேலாண்மை மற்றும் ஊழல் தடுப்பு திட்டத்தை உருவாக்குவது.
  7. மாநில அரசின் அனைத்து துணை நிறுவனங்களிலும் 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 17ஏ பிரிவின் படி நிறுவன கடப்பாட்டு அமலாக்கப் பிரிவை அமைப்பது
  8. ஊழல் தடுப்பு தொடர்பான கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்து
  9. ஊழலுக்கு எதிரான பிரசுரங்களை வெளியிடுவது.
  10. அரசு ஊழியர்களின் உயர் நெறி தொடர்பான புகார்களை பெறுவதற்கான தொடர்பு முறைகளை ஏற்படுத்துவது.                                                                                                                  மாநில சட்டமன்றத்தில் இன்று ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் உலு கிளாங் சட்டமன்ற உறுப்பினர் ஷாஹாரி சுங்கிப் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மந்திரி புசார் இந்த பத்து திட்டங்களை பட்டியலிட்டார்.

Pengarang :