ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஆப்கானிஸ்தானில் இரு மலேசியர்கள் தடுத்து வைப்பு- போலீசார் விசாரணை

கோலாலம்பூர், ஆக 29- ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் இரு மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அந்நாட்டு வெளியுறவுத் துறையிடம் அரச மலேசிய போலீஸ் படை விண்ணப்பம் செய்துள்ளது.

டாயேஷ் போராளி கும்பலில் இடம் பெற்றது தொடர்பில் இரு மலேசியர்களை தலிபான்கள் கைது செய்துள்ளத் தகவல் தங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ அக்ரி சானி அப்துல்லா கூறினார்.

ஆப்கானிஸ்தானிலுள்ள டாயேஷ் கும்பலுடன் மலேசியர்களுக்கு உள்ள தொடர்பு தொடர்பில் இதுவரை நாங்கள் எந்த தகவலையும் பெறவில்லை என்று அவர் சொன்னார்.

இருந்த போதிலும், வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களுக்கு டாயேஷ் அமைப்புடன் தொடர்பு இருப்பதற்கான சாத்தியத்தின் அடிப்படையில் இவ்விவகாரம் மீது தாங்கள் விசாரணை நடத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தானில் நிகழந்த இரு தற்கொலை குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரு மலேசியர்கள் உள்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


Pengarang :