Ahli Dewan Negeri (ADN) Kota Anggerik, Mohd Najwan Halimi bersama jawatankuasa pengurusan Maahad Tahfiz Al-Quran Wa Assunnah selepas berbincang di Surau An-Nur, Seksyen U9 Shah Alam. Foto Facebook NAJWAN HALIMI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இலவச இணைய தரவு சேவைக்கு விண்ணப்பம் செய்வீர்- கோத்தா அங்கிரிக் தொகுதி வேண்டுகோள்

ஷா ஆலம், ஆக 29- சிலாங்கூர் அரசின் இலவச இணைய தரவு சேவையை பெறுவதற்கு விண்ணப்பம் செய்யும்படி கோத்தா அங்கிரிக் தொகுதி மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பன்னிரண்டு மாதங்களுக்கு இலவச இணைய தரவு சேவையை வழங்கக்கூடிய இத்திட்டத்தில் பங்கேற்பதற்கு தொகுதி சார்பில் 200 பேருக்கு வாயப்பு வழங்கப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

இந்த சேவையைப் பெற விரும்பும் தொகுதி மக்கள் https://forms.gle/eb1ESaHcF8Lrhmb9A. எனும் அகப்பக்கம் வாயிலாக அல்லது இந்த திட்டம் தொடர்பான பிரசுரங்களில் காணப்படும் கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்றும் அவர் சொன்னார்.

இத்திட்டத்திற்கு மாணவர்கள், வணிகர்கள், இணையம் வழி வர்த்தகம் புரிவோர், உணவு பட்டுவாடா பணியாளர்கள், இளைஞர்கள் மற்றும் தனித்து வாழும் தாய்மார்கள் விண்ணப்பம் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஓராண்டு காலத்திற்கு இலவச இணைய சேவையை வழங்கக்கூடிய கைபேசி சிம் கார்கள் மாநிலத்திலுள்ள 70,000 பேருக்கு விநியோகிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஆகஸ்டு 4ஆம் தேதி கூறியிருந்தார்.

 


Pengarang :