ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

பத்தாயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த கிளானா ஜெயா, பி.கே.என்.எஸ். தடுப்பூசி மையம் இலக்கு

பெட்டாலிங் ஜெயா, செப் 1-பத்தாயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த கிளானா ஜெயா, பி.கே.என்.எஸ். விளையாட்டு மையத்தில் உள்ள தடுப்பூசி மையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் இம்மையத்தில் 3,000 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அந்த மையத்தின் நிர்வாகி முகமது நோர் ஹபிஸ் ஜம்ரி கூறினார்.

பத்தாயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைவதற்காக இந்த செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம இம்மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

நேற்று செலுத்தப்பட்ட 2,000 தடுப்பூசிகள் நீங்கலாக இம்மையத்தில் இதுவரை 3,000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த மையம் வரும் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக மூடப்படுவதற்கு முன்னர் எஞ்சிய தடுப்பூசிகள் அடுத்து வரும் நாட்களில் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி பெறுவதற்கு இம்மையத்திற்கு வர முடியாதவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள செல்கேர் கிளினிக்குகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். எனினும், கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டது அல்லது நோய்த் தொற்று உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த காரணத்தால் தனிமைப்படுத்தப்பட்டது போன்ற நியாயமான காரணங்களை அவர்கள் காட்ட வேண்டும் என்றார் அவர்.

இந்த மையத்தில் தடுப்பூசி பெற்ற 3,000 பேரில் ஐந்து விழுக்காட்டினர் மட்டுமே மைசெஜாத்ரா செயலியில் இலக்கவியல் தடுப்பூசி சான்றிதழ் தோன்றத் தவறியது போன்ற நுட்ப பிரச்னைகளை எதிர்நோக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :