ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் நேற்று வரை 65.1 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்

கோலாலம்பூர், செப் 2- நாட்டில் நேற்று வரை 18 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்களில் 65.1 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 52 லட்சத்து 41 ஆயிரத்து 655 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மொத்தம் 1 கோடியே 99 லட்சத்து 32 ஆயிரத்து 137 பேர் அல்லது 85.1 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக்குழு தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதன் வழி தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் (பிக்) வழி நேற்று வரை நாட்டில் மொத்தம் 3 கோடியே 51 லட்சத்து 50 ஆயிரத்து 474 தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளதாகவும் அது கூறியது.

நாட்டு மக்களில் 61 விழுக்காட்டினர் குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ள வேளையில் 46.7 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்றும் அப்பணிக்குழு தெரிவித்தது.

இதனிடையே, நேற்று மட்டும் நாட்டில் 398,134 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டத் தகவலையும் அப்பணிக்குழு வெளியிட்டது. 188,780 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 209,354 பேர் இரண்டாது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

 


Pengarang :