PUTRAJAYA, 2 Okt — Ketua Pengarah Kesihatan Tan Sri Dr Noor Hisham Abdullah menyampaikan statistik jangkitan pada sidang media mengenai jangkitan COVID-19 di Kementerian Kesihatan hari ini. — fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA PUTRAJAYA, Oct 2 — Director General of Health Tan Sri Dr Noor Hisham Abdullah updating the statistics during a press conference on COVID-19 outbreak at the Health Ministry today. — fotoBERNAMA (2020) COPYRIGHT RESERVED
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

கோவிட்-19 நோய்த் தொற்று இன்று 20,988 ஆக உயர்வு- சிலாங்கூரில் 4,073 பேர் பாதிப்பு

ஷா ஆலம், செப் 2- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 20,988 ஆக உயர்வு கண்டது. நேற்று இந்த எண்ணிக்கை 18,762 ஆக இருந்தது.

சிலாங்கூரில் நோய் கண்டவர்கள் எண்ணிக்கை நேற்று 3,711 ஆக குறைந்த வேளையில் இன்று அந்த எண்ணிக்கை 4,073 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சரவா மாநிலத்தில் நோய்த் தொற்று  தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறிய அவர், நேற்று 2,414 பேர் பாதிப்புக்குள்ளான வேளையில் இன்று அந்த எண்ணிக்கை 2,992 ஆக உயர்வு கண்டுள்ளதாக அவர் சொன்னார்.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சம்பவங்களைப் பதிவு செய்த மாநிலங்களின் பட்டியலில் கெடா (2,455), சபா (2,329), ஜொகூர் (2,145) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

மேலும் பினாங்கில் 1,600 பேரும் கிளந்தானில் 1,247 பேரும் இந்நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை வருமாறு-

பேராக் (990), திரங்கானு (987), கோலாலம்பூர் (731), பகாங் (599), மலாக்கா (407), நெகிரி செம்பிலான் (301), பெர்லிஸ் (90), புத்ரா ஜெயா (37), லவுவான் (5).


Pengarang :