EXCO Kerajaan Prihatin V Ganabatirau (kiri) menyerahkan bantuan Program Pemberian Barangan Perlidungan Kesihatan dan Makanan Berkhasiat kepada penerima, Noor Rila Md Noor pada 14 September 2020.
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் 7,000 பேருக்கு உணவுக் கூடைகள் விநியோகம்

ஷா ஆலம், செப் 4- கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட கோத்தா கெமுனிங் தொகுதியைக் சேர்ந்த ஏழாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொகுதி சார்பில் உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.

அரிசி, சமையல் எண்ணைய், சார்டின், பால் உள்ளிட்ட அத்தியாசிய உணவுப் பொருள்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

இந்த நோய்த் தொற்று பரவல் காரணமாக உதவி தேவைப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நகர்ப்புற ஏழைகளின் ண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்றார் அவர்.

ஆகவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பற்றாக்குறை பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காவும் அவர்களின் சுமையைக் குறைப்பதற்காகவும் இத்தகைய உதவித் திட்டங்களை தொடர்ந்து அமல்படுத்தி வருவோம் என்று அவர்  குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள தமது அலுவலகத்தில் ஆலயங்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்வின் போது பரிவுமிக்க சமுதாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் இதனைக் கூறினார்.

மேலும், வசதி குறைந்தவர்களுக்கு வழங்குவதற்காக 10,000 வெள்ளி மதிப்பிலான பற்றுச்சீட்டுகளை தாங்கள் தயார் செய்துள்ளதாகவும் அவர் சொன்னார். தலா ஐம்பது வெள்ளி மதிப்பிலான இந்த பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தி 99 ஸ்பீட் மார்ட் கடைகளில் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்றார் அவர்.


Pengarang :