ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் நோய்த் தொற்று தொடர்ந்து குறையும்-சுகாதார இலாகா கணிப்பு

ஷா ஆலம், செப் 9- சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை வரும் வாரங்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைய காலமாக பதிவாகி வரும் நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இவ்வாறு கணிக்கப்படுகிறது.

கோவிட்-19 நோய்த் தொற்றின் தினசரி மற்றும் வாராந்திர எண்ணிக்கை பெண்டமிக் எனப்படும்  குறைந்த பட்ச அளவை எட்டும் என்று சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙகாடிமான்  கூறினார்.

நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி மற்றும் வாராந்திர எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அடுத்து வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கை மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி செல்லவிருக்கும் மாணவர்களுக்கான தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்துவதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கையை நிலைநிறுத்தவும் மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமாகும் என்றார் அவர்.

மாநிலத்தில் நோய்த் தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக நோய்க்கான அறிகுறி உள்ளவர்களுக்கு கோவிட்-19 சோதனை மேற்கொள்ளும் திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்  தெரிவித்தார்.

நோய் கண்டவர்கள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.  மற்றவர்களுக்கும் நோய் பரவுவதை கட்டுப்படுத்த இந்நடவடிக்கை பெரிதும் உதவும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :