ECONOMYHEADERADNATIONALSELANGOR

நியாயமற்ற முறையில் விலையை உயர்த்தாதீர்!  கோழி வியாபாரிகளுக்கு வலியுறுத்து

ஷா ஆலம், செப் 17- கோவிட்-19 பெருந் தொற்றை வாய்ப்பாக பயன்படுத்தி கோழி விலையை உயர்த்துவதை தவிர்க்கும்படி கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்த உணவுப் பொருளின் விலை உயர்வு காணாமலிருபப்பதை உறுதி செய்ய தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு தொடந்து  மேற்கொள்ளும் என்று பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது ஜவாவி அப்துல் முக்னி கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் தாம் மாநில பயனீட்டாளர் விவகார துறை இயக்குநரை சந்தித்ததாகவும்  அவர் சொன்னார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய கோழியின் விலைக் சம்பந்தப்பட்ட தரப்பினர் உயர்த்தியது தங்கள் தாங்கள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அச்சந்திப்பின் போது எங்களிடம் தெரிவிக்கப்பட்டது என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மக்கள் தற்போது கடும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கோழியின் விலையை உயர்த்துவதை நிறுத்தும்படி உற்பத்தியாளர்கள்,  மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

இம்மாதம் 6 ஆம் தேதி நிலவரப்படி ஒரு கிலோ கோழியின் விலை வெ.8.39 லிருந்து வெ. 8.47 ஆக உயர்ந்துள்ளதை உள்நாட்டு வாணிப அமைச்சு உறுதி படுத்தியது

Pengarang :