ECONOMYMEDIA STATEMENTNATIONAL

யுனிசெல் பெஸ்தாரி ஜெயா விரைவில் ”ட்ரோன் தொழில்நுட்ப” மையமாக விளங்கும்

பெஸ்தாரி ஜெயா, 19 செப்டம்பர்: யுனிவர்சிட்டி சிலாங்கூர் (யுனிசெல்) பெஸ்தாரி ஜெயா வளாகம் அருகில் அதிக காலியிடம் இருப்பதால் ட்ரோன் தொழில்நுட்ப மையமாக வளரும் சாத்தியம் உள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய ட்ரோன் சப்ளையர் ஏரோடைன் மற்றும் மாநில அரசின் துணை நிறுவனமான செலத்தி ஆகியவற்றுடன் பல்கலைக்கழகத்தை மையமாக்கும் முயற்சியில் உடன்பாடு எட்டப்பட்டதாக துணைவேந்தர் கூறினார்.

“இந்த பகுதி மலைகளின்றி சமதரையாக, அகலமானதாக இருப்பது மற்றும் மிக முக்கியமாக விமானப் பாதையாக இல்லாமலிருப்பது ,  இது ட்ரோன் தொழில்நுட்பத்தை மேம்படுத்த நல்ல ஆற்றலைக் கொண்டுள்ளது. எல்லா முயற்சிகளும் வெற்றிபெற்றால், யுனிசெல் ஒருநாள் பொருத்தமான மற்றும் புகழ்பெற்ற மையமாக உலக வரைபடத்தில் இருக்கும்” என்று டோமன் மற்றும் தோமான்ஸ் ஏரியின் தொடக்க விழாவில் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது ரெட்ஜுவான் ஓத்மான் கூறினார்.

இதற்கிடையில், வளாகத்தில் கைவிடப்பட்ட 26.3 ஹெக்டேர் ஏரியை தூர்வாரி மேம்படுத்துவதும்  அப்பகுதிக்கு புதிய பொலிவை  அளிக்கும் என்றார்.”வளாகத்திற்கு முன்னால் உள்ள ஏரியை தூர்வார அனுமதிக்க செமஸ்டாவுடன் (கும்புலன் செமஸ்டா எஸ்.டி.என் பிஎச்.டி) நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.

இவைகள், நடைமுறையில் உள்ள நடமாட்ட கட்டுப்பாடு விதி மீட்சி கட்டத்திற்கு பின், திட்டம் இயங்கி ஒரு முக்கியமான பொழுதுபோக்கு பகுதியாக இது மாறும்,” என்று அவர் கூறினார். டாக்டர் முகமது ரெட்ஜுவான் மேலும் கூறுகையில், வளாகத்திலிருந்து 40.5 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு வீட்டுத் திட்டத்தை நிர்மாணிப்பை தொடர்ந்து அந்தப் பகுதியும் செழித்து வளரும் என்றார் அவர்.

“இந்த பகுதி இனி ஒதுக்குபுறமான ஒன்றல்ல, ஒரு பிரபலமான ஈர்ப்பாக மாறியுள்ளது, மேலும் மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை (WCE) திறக்கப்படும். உண்மையில், நுழைவாயிலில் (யுனிசெல்) ஓய்வு மற்றும்  உணவு, பொழுது போக்கு நிறுத்தத்தை (ஆர்என்ஆர்) உருவாக்க நாங்கள் பல எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், ”என்று அவர் கூறினார்.

 


Pengarang :