ECONOMYPBTSELANGOR

நாட்டில் 1.9 கோடி மலேசியர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், செப் 24- நாட்டில்  1 கோடியே 91 லட்சத்து 56 ஆயிரத்து 694 பேர் அல்லது 81.8 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 18 லட்சத்து 47 ஆயிரத்து 551 பேர் அல்லது 93.3 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் எனும் அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 23,703 பேர் அல்லது 0.8 விழுக்காட்டு இளையோர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக அமைச்சு கூறியது.

நேற்று நாடு முழுவதும் 326,612 பேர் பெரியவர்கள் மற்றும் இளையோருக்கான தடுப்பூசித் திட்டங்களின் கீழ் தடுப்பூசிப் பெற்றனர். அவர்களில் 132,562 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் 194, 050 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

இதன் வழி, பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் மூலம் 4 கோடியே 15 லட்சத்து 73 ஆயிரத்து 883 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நேற்று நள்ளிரவு 11.59 மணி வரை கோவிட்-19 தொடர்புடைய 116 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனுடன் சேர்த்து இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 24,681 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :