ECONOMYHEALTHPENDIDIKAN

பள்ளி திறப்பதற்கு முன் கோவிட்-19 சுயப் பரிசோதனை கருவியின் விலை மேலும் குறைக்கப்படும்

கோல பெராங், செப் 25- கோவிட்-19 சுயப் பரிசோதனை கருவியின் விலை இம்மாத இறுதிவாக்கில் மேலும் குறைக்கப்படும். அடுத்த மாதம் 3ஆம் தேதி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன் பெற்றோர்கள் அவர்களுக்கு கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அந்த சுயப் பரிசோதனை கருவியின் புதிய விலை விரைவில் அறிவிக்கப்படும் என்று உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை துணைமையச்சர் டத்தோ ரோசோல் வாகிட் கூறினார்.

இந்த கருவியின் விற்பனை தற்போது உள்ளதைப் போல் மருந்தகங்கள் மற்றும் கிளினிக்குகளை மட்டும் உள்ளடக்கியிருக்காது. மாறாக, பேரங்காடிகள் மற்றும் மினி மார்க்கெட்டுகளிலும் அந்த கருவிகள் விற்பனை செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்நடவடிக்கையின் வாயிலாக குறைவான விலையிலும் எல்லா இடங்களிலும் அந்த கருவியைப் பெறுவதற்குரிய வாய்ப்பினை பொதுமக்கள் பெறுவர் என்றார் அவர்.

அந்த கருவிக்கான விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும், அது தற்போதுள்ள விலையைக் காட்டிலும் குறைவானதாகவும் பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையிலும் இருக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.

சுயப் பரிசோதனை கருவிகளுக்கான சில்லறை உச்ச வரம்பு விலை வெ.19.90 ஆகவும் மொத்த விலை வெ.16.00 ஆகவும் நிர்ணயிக்கப்படுவதாக அமைச்சு இம்மாதம் 5 ஆம் தேதி அறிவித்திருந்தது.


Pengarang :