MEDIA STATEMENTPBTSELANGOR

தாமான் கின்ராரா 1 இல் இன்று நடமாடும் தடுப்பூசி இயக்கம்

ஷா ஆலம், செப் 27– சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசி இயக்கம் இன்று திங்கள் கிழமை பூச்சோங், தாமான் கின்ராரா 1 சமூக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி இயக்கத்தில் பதினெட்டு வயதுக்கும் மேற்பட்ட உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் பங்கு கொள்ளலாம் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

மாநிலத்திலுள்ள யாரும் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் நடத்தப்படும் இந்த தடுப்பூசி இயக்கத்திற்காக 350 டோஸ் தடுப்பூசிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக ஊராட்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

இந்த தடுப்பூசித் திட்டத்தில் பங்கு கொள்வோர் செலங்கா செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதோடு உள்நாட்டினர் அடையாளக் கார்டையும் வெளிநாட்டினர் கடப்பிதழையும் உடன் கொண்டு வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மாநில அரசின் ஏற்பாட்டிலான இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கம் இம்மாதம் 12 ஆம் தேதி தொடங்கி மாநிலத்தின் 11 தொகுதிகளில் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Pengarang :