ECONOMYMEDIA STATEMENTNATIONAL

12வது மலேசியத் திட்டம்- புதிய, நடப்புத் திட்டங்களை மேற்கொள்ள .40,000 கோடி வெள்ளி ஒதுக்கப்படும்

கோலாலம்பூர், செப் 27– நாட்டில் நடப்பிலுள்ள மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடரவும் புதிய திட்டங்களை அமல்படுத்தவும் 12வது மலேசியத் திட்டத்தில் 40,000 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும்.

அடுத்தாண்டில் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றவுடன் நடப்பிலுள்ள திட்டங்களைத் தொடர்வதில் மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

2020 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறையின் அளவு 6.2 விழுக்காடு வரை விரிவடையும் அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்திற்கு கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.

வரும் 2023ஆம் ஆண்டுவாக்கில் நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் போது நாட்டின் பொருளாதாரமும் சிறப்பான நிலையை அடையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று நாடாளுமன்றத்தில் 12 வது மலேசியத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் தெரிவித்தார்.

நாட்டின் சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை கையாள்வது தொடர்பில் பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில அரசுகளிடமிருந்து நிறைய பரிந்துரைகளைத் தாங்கள் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களின் உயிரைக்காப்பதற்கும்  அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கும் நிறைய பொறுப்புகள் உள்ளதால் இவ்வாண்டும் அடுத்தாண்டும் மேம்பாட்டுத் திட்டங்களை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

 


Pengarang :