ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தப்படுத்துவதில் டீம் சிலாங்கூர் உதவி

ஷா ஆலம் செப் 28- ஷா ஆலம் வட்டாரத்தில் நேற்று முன்தினம் பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதில் டீம் சிலாங்கூர் அமைப்பைச் சேர்ந்த 30 தன்னார்வலர்கள் உதவி புரிந்தனர்.

பாடாங் ஜாவா மற்றும்  பத்து தீகாவிலுள்ள்ள 105 வீடுகளில் துப்புரவுப் பணிகளை அந்த தன்னார்வலர்கள் மேற்கொண்டதாக டீம் சிலாங்கூர் அமைப்பு கூறியது.

அந்த இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டதாக அது மேலும் தெரிவித்தது.

எங்களின் கோரிக்கையை ஏற்று இந்த பணியை செவ்வனே செய்து முடித்த அந்த தன்னார்வலர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த உதவி பாதிக்கப்பட்ட மக்களின் சுமையை ஓரளவு குறைக்க உதவும் என டிவிட்டர் பதிவில் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை தொடங்கி பல மணி நேரத்திற்கு நீடித்த அடை மழையில் ஷா ஆலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.


Pengarang :