ALAM SEKITAR & CUACAHEALTHPBT

பெட்டாலிங் ஜெயாவில் டிங்கி சம்பவங்கள் 71 விழுக்காடு குறைந்தது

பெட்டாலிங் ஜெயா, செப் 29- பெட்டாலிங் ஜெயாவில் இவ்வாண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 71 விழுக்காடு குறைந்து 952 ஆக பதிவாகியுள்ளது.

கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 3,240 ஆக பதிவானதாக பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் கூறியது.

அக்காலக்கட்டத்தில் ஒன்பது பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டிலும் ஒரு ஒரு இடம் கட்டுப்பாட்டை மீறியும் ஒரு இடம் நோய்ப் பரவலுக்கான அதிக தாக்கத்தையும் கொண்டிருந்ததாக மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

டிங்கி நோய் பரவல் குறைந்திருந்தாலும் பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல்  தங்கள் வீட்டின் சுற்றுப்புறங்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்து வரவேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் பொதுமக்கள் நீர் தேங்கிய இடங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்பதோடு சுத்தத்தை உறுதி செய்வதற்கு பத்து நிமிடங்களை செலவிட வேண்டும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியது.

பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் டிங்கி சம்பவங்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை முழுமையாக வழங்க வேண்டும் என மாநகர் மன்றம் கேட்டுக் கொண்டது.

Pengarang :