Anggota penguat kuasa dan keselamatan MPS merampas botol arak dari premis menjual minuman keras tanpa lesen ketika serbuan di Taman Seri Gombak, Batu Caves pada 17 Ogos 2020. Foto Facebook MPS
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

விஷத்தன்மையுடைய மதுவுக்கு நாட்டில் செப்டம்பர் முதல் 33 பேர் மரணம்

புத்ரா ஜெயா, அக் 2- நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மெத்தனோல் எரிசாராயம் தொடர்பான 33 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

அந்த 33 மரணச் சம்பவங்களில் 18 அல்லது 55 விழுக்காடு உள்நாட்டினர் சம்பந்தப்பட்டவை என்றும் எஞ்சிய 15 சம்பவங்கள் அல்லது 45 விழுக்காடு மியன்மார், இந்தியா, நேப்பாள் ஆகிய நாடுகளின் பிரஜைகளை உள்ளடக்கியவை என்றும் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சிலாங்கூரில் 25 மெத்தனோல் விஷத்தன்மை சம்பவங்கள் பதிவான வேளையில் அதற்கு அடுத்த நிலையில் பேராக் (13), பகாங் (5), பினாங்கு (6), கோலாலம்பூர் (4) ஆகிய மாநிலங்கள் உள்ளன. மேலும், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலானில் தலா ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட 55 பேரில் 15 பேர் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மதுபான தயாரிப்பு முறையாக மேற்கொள்ளப்பபடாததால் அதில் உள்ள மெத்தனோல் விஷத்தன்மை அடைவது அல்லது மதுவை அருந்துவதற்கு முன்னர் அதில் மெத்தனோல் கலக்கப்படுவது ஆகிய காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் மதுபானங்களில் மட்டுமே இத்தகைய மெத்தனோல் விஷத்தன்மை பிரச்சனை எழுகிறது. மதுபானங்களில் வழக்கமாக பயன்படுத்தப்படும் எத்தனோலுக்கு பதிலாக மலிவான விலையில் கிடைக்கக்கூடிய எத்தனோல் பயன்படுத்தப்படுவதே இந்த விஷத்தன்மை பிரச்னைக்கு காரணம் என்று அவர் தெரிவித்தா


Pengarang :