ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோம்பாக்கில் இரு சிலாங்கூர் கூ திட்டங்கள் மீண்டும் தொடரும்- ரோட்சியா தகவல்

கோம்பாக், அக் 3- கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் செலாயாங் தாமான் முத்தியாராவில் உள்ள நீலாம் மற்றும் கிறிஸ்டல் சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்டங்களின் நிர்மாணிப்புப் பணிகள் மீண்டும் தொடரப்படவுள்ளன.

அந்த கட்டுமானப் பகுதியில் தங்கியிருந்த கம்போங் பெண்டஹாராவைச் சேர்ந்த ஒன்பது குடும்பங்கள் அவ்விடத்தை காலி செய்ய ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து இத்திட்டத்தை மீண்டும் தொடர்வதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

அந்த குடிசைவாசிகளுக்கு மாற்று நிலங்கள் ஏற்பாடு செய்யும் பணிகள் முற்றுப்பெற்ற நிலையில் நாம் அந்த சிலாங்கூர் கூ வீடுகளை மறுபடியும் நிர்மாணிக்கவுள்ளோம். வீடுகளை வாங்கியோர் இனியும் காத்திருக்க வேண்டியதில்லை என்றார் அவர்.

அந்த வீடமைப்புத் திட்டம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக கைவிடப்பட்டு கிடந்தது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு ஓராண்டு காலத்தில் வீடுகள் முழுமை பெறும் என்று அவர் சொன்னார்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நேற்று இங்கு நடைபெற்ற கோம்பாக் வட்டாரத்திலுள் 19 குடிசைவாசிகளுக்கு மாற்று நிலத்திற்கான 5ஏ பாரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :