ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

19 குடிசைவாசிகளுக்கு நிலப்பட்டா- சிலாங்கூர் மாநில அரசு வழங்கியது

கோம்பாக், அக் 2- மேம்பாட்டுத் திட்டத்திற்கு வழிவிடும் வகையில் குடியிருப்பை காலி செய்த கோம்பாக் மாவட்டத்தைச் சேர்ந்த 19 குடிசைவாசிகளுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது.

சுங்கை துவா சட்டமன்றத் தொகுதிக்கு இன்று பணி நிமித்த வருகை மேற்கொண்ட மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு 5ஏ பாரங்களை வழங்கினார்.

கம்போங் சுங்கை துவாவை சேர்ந்த 10 பேருக்கும் கம்போங் பெண்டஹாராவை சேர்ந்த 9 பேருக்கும் மாற்று நிலம் குவாங் மற்றும் பத்து ஆராங்கில் வழங்கப்பட்டதாக அமிருடின் தெரிவித்தார்.

சுங்கை துவா வட்டாரத்திலுள்ள குடிசைவாசிகளின் பிரச்னைக்கு இன்று தீர்வு கண்டுள்ளோம். ஆற்றோரம் வசித்து வந்த அவர்கள் அடிக்கடி வெள்ளப் பிரச்னையை எதிர்நோக்கி வந்தனர் என்று அவர் சொன்னார்.

கம்போங் பெண்டஹாராவிலுள்ள நிலத்தை மாநில அரசு மேம்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பாகத் தேறிய தொகுதியைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு அவர் அன்பளிப்புகளை வழங்கினார்.

அத்தேர்வில் 9ஏ பெற்ற மாணவர்களுக்கு  மடிக்கணினியும் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்ட வேளையில் 7ஏ மற்றும் 8ஏ பெற்ற மாணவர்களுக்கு ரொக்கத் தொகை வழங்கப்பட்டது. 


Pengarang :