ECONOMYMEDIA STATEMENTNATIONAL

10,000 சுற்றுலா பற்றுச்சீட்டுகள் அக்டோபர்  22 முதல் விநியோகம்

சுபாங் ஜெயா, அக் 5- சிலாங்கூர் மாநில அரசின் இரண்டாம் கட்ட சுற்றுலா பற்றுச் சீட்டுகள் இம்மாதம் 22 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் விநியோகிக்கப்படும்.

இம்மாதம் 22 ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை பயன்படுத்தக் கூடிய 100 வெள்ளி மதிப்பிலான அந்த பற்றுச் சீட்டுகளை மின் வணிகத் தளமான ஷோப்பியில் பெற்றுக் கொள்ளலாம் என்று சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

இம்முறை இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள 28 சுற்றுலா நிறுவனங்கள் வழங்கக்கூடிய சுற்றுலா திட்டங்களில் பங்கேற்பதற்கு இந்த பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தலாம் என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்டமிக் காலத்தை நெருங்கி வரும் நிலையில்  சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதில் 10 லட்சம் வெள்ளி செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் ஆக்ககரமான பங்கினை ஆற்றும் எனத் தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

சன்வே லாகூன் கேளிக்கை மையத்தில் இன்று  சுற்றுலா பற்றுச்சீட்டுகளை  விநியோகிக்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் சிலாங்கூர் அரசு முதல் கட்ட சுற்றுலா பற்றுச் சீட்டுத் திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் அமல்படுத்தியது. இத்திட்டத்திற்கு  20 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.


Pengarang :