ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டது

ஷா ஆலம், அக் 5- மலாக்கா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது. இந்த சட்டமன்ற கலைப்பு நேற்று அமலுக்கு வந்ததாக மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ அப்துல் ரவுப் யூசோ அறிவித்தார்.

மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெறும் வரை நடப்பு அரசாங்கம் பராமரிப்பு அரசாங்கமாக செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.

 மாநில சட்டமன்றத்தில் நான்கு உறுப்பினர்களின் ஆதரவை இழந்ததைத் தொடர்ந்து மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ சுலைமான் முகமது அலி ஆளுநரைச் சந்தித்து சட்டமன்றத்தைக் கலைக்கும் பரிந்துரையை முன்வைத்தார்.

அசகான் தொகுதி தே.மு. உறுப்பினர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண், பந்தாய் குண்டோர் தே.மு. உறுப்பினர் டத்தோ நோர் அசாம் ஹசான், தெலுக் மாஸ் பெர்சத்து உறுப்பினர் டத்தோ நோர் எப்பாண்டி அகமது, பெக்கலான் பத்து சுயேச்சை உறுப்பினர் டத்தோ நோர்ஹிஷாம் ஹசான் ஆகிய நால்வரும் முதலமைச்சருக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து மாநில அரசாங்கம் கவிழந்தது


Pengarang :