ECONOMYMEDIA STATEMENTNATIONAL

18 வயதுக்கும் மேற்பட்டோர் இயல்பாக வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவர்

ஷா ஆலம், அக் 6- நாட்டிலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்டோர் இயல்பாக வாக்காளர்களாகப் பதிவு செய்யப்படுவர். இதற்கான சட்டம் அமல்படுத்தப்பட்டவுடன்  இந்த நடைமுறை  நடப்புக்கு வரும் என்று  பிரதமர் துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்கள்) துணையமைச்சர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கூறினார்.

வெளிநாடுகளில் உள்ள அதே சமயம் இன்னும் வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளாதவர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்று அவர் சொன்னார்.

இயல்பாக வாக்காளராக பதிவு செய்யும் நடைமுறையை அமல் செய்வதில் தேர்தல் ஆணையம் கடப்பாடு கொண்டுள்ளது. இதிலிருந்து யாரும் விடுபடமாட்டார்கள் என்று அவர்  தெரிவித்தார்.

கூச்சிங் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கேற்ப இந்த இயல்பாக வாக்காளராக நடைமுறை வரும் டிசம்பர் 31 ஆம் தேதி அமல்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

பதினெட்டு வயதுக்கும் மேற்பட்டோரை இயல்பாக வாக்காளராக ஆக்கும் நடைமுறையை வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் அமல்படுத்தும்படி கூச்சிங் உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் உத்தரவிட்டிருந்தது.

வாக்களிப்பதற்கான வயது வரம்பை 21லிருந்து 18 ஆக குறைப்பது தொடர்பான அரசியலமைப்புச் சட்ட விதிகளில் அரசாங்கம் விரைந்து திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் எனக் கோரி ஐந்து இளையோர் தாக்கல் செய்த சீராய்வு மனு ஒன்றை  கூச்சிங் உயர் நீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டர் சியு ஹோ வாய் ஏற்றுக் கொண்டார்.

 


Pengarang :