ADN Batu Tiga Rodziah Ismail (kanan) menyantuni penerima vaksin Covid-19 dalam program Vaksin Selangor (Selvax) bergerak DUN Batu Tiga di Dewan Majlis Bandaraya Shah Alam (MBSA) pada 13 September 2021. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ECONOMYHEADERADHEALTHNATIONAL

நாட்டில் 89.7 விழுக்காட்டு பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், அக் 10- நாட்டில் நேற்று வரை 89.7விழுக்காட்டு பெரியவர்கள் அல்லது 2 கோடியே 10 லட்சத்து 3 ஆயிரத்து 074 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

நேற்று பதிவான தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையை விட இது 0.3 விழுக்காடு அதிகமாகும்.  நாட்டில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையை 90 விழுக்காடாக உயர்த்தும் இலக்கை அடைய இன்னும் 0.6 விழுக்காடு மட்டுமே எஞ்சியுள்ளது.

நாட்டில் இதுவரை 2 கோடியே 21 லட்சத்து 76 ஆயிரத்து 018 பேர் அல்லது 94.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் அகப்பகமான கோவிட்நாவ் கூறியது

நேற்று நாடு முழுவதும் 83,443  பேருக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அவர்களில் 8,236 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 75,207 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 67 ஆயிரத்து 793 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 6.5 விழுக்காட்டினர் அல்லது 204,536 பேர் இரண்டு  டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 70.4 விழுக்காட்டினர் அல்லது 22 லட்சத்து 48 ஆயிரத்து 867 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

 

 


Pengarang :