ECONOMYPBTSELANGOR

சிலாங்கூர் மாநில இந்தியர் வர்த்தக மற்றும் தொழில்  மேம்பாட்டுத்துறை (ஐ-சீட்) வணிக உபகரணங்களை வழங்கியது.

காஜாங் 11 அக் ;- சிலாங்கூர் மாநில சமூக பொருளாதார மேம்பாடு, சமூக நலன்தொழிலாளர் ஆற்றல் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தலைமையில்  செயல்படும்  சிலாங்கூர் மாநில இந்தியர் வர்த்தக மற்றும் தொழில்  மேம்பாட்டுத்துறை (ஐ-சீட்) முதல் கட்டமாக 2021 ம் ஆண்டுக்கான வணிக உபகரணங்கள் ஒப்படைப்பை இன்று, உலு லங்காட் மாவட்டத்தில் மேற்கொண்டது.  

 சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு வீ.கணபதிராவ் சார்பில் அவரின் அதிகாரிகள் செகு.ஆனந், திருமதி யோகேஸ் மற்றும் இந்திய சமூக தலைவர் இராஜகுமாரன் ஐ-சீட் உதவி அதிகாரிகள் ஜெய்குகநாதன், கமலநாதன் மற்றும் டிக்கம் லூட்ஸ்   ஆகியோருடன் காஜாங் மாவட்ட பொங்குளு அசாஸரின் ஆகியோரும் இந்நிகழ்வுக்கு வருகைப் புரிந்தனர்.

 இன்றைய நிகழ்வில் கோழி இறகுகளை அகற்றும் மின்சார சாதனம், இரண்டு  தையல் இயந்திரம், துணிகளின் ஓரம் தைக்கும் இயந்திரம், ஸ்திரிக்கா பெட்டிகள் மற்றும் ஆடை சரிபார்க்கும் அறை ஆகியவற்றை சிறு தொழில் உதவிக்கு விண்ணப்பித்தவர்களிடம் ஒப்படைத்தனர்.

 இதில் காஜாங் செமினி வட்டாரத்தைச் சார்ந்த திரு. ஆர். கிருஷ்ணசாமி ராமசாமி, கோழி இறகுகளை அகற்றும் மின்சார சாதனத்தையும்,  அதே வட்டாரத்தை சேர்ந்த புஸ்பவதி பழனி  மற்றும்  காஜாங் வட்டாரத்தை சேர்ந்த சந்திரகலா சுப்பிரமணியம் ஆகியோர்கள் தைக்கும் இயந்திரம் மற்றும்  அதன் தொடர்பான  உதவிப் பொருட்களுக்கும்   விண்ணப்பித்திருந்தனர்.   நேற்று அந்த உதவிப் பொருட்களை பெற்றுக் கொண்டார்.


Pengarang :