ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

இலக்கவியல் திட்டம்- முன்னிலையில் சிலாங்கூர் மாநிலம்

ஷா ஆலம், அ;க் 12- சிலாங்கூர் மாநிலம் 2025  விவேக நடவடிக்கைத் திட்டத்தை அமல்படுத்தியதன் வழி இலக்கவியல் துறையில் பிற மாநிலங்களைக் காட்டிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த முயற்சியை மேலும் விரிவுபடுத்தும் வகையில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மேலும் சில இலக்கவியல் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கடந்தாண்டு முதல்  மேம்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும்  செயலிகள் பின்வருமாறு-  வாகன நிறுத்துமிட கட்டணம் செலுத்தும் செயலி  –  இந்த செயலியை சிலாங்கூரிலுள்ள 10 ஊராட்சி மன்றங்கள் பயன்படுத்தி வருகின்றன –  கார் நிறுத்துமிடக் கட்டணம் மற்றும் அபராதத்தை செலுத்துவதற்கு அந்த செயலியை ஸ்கேன் செய்தால் போதுமானது.

-வாகனம் நிறுத்துவதற்கு  ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைவது நினைவூட்டப்படும்

– இவ்வாண்டு ஜனவரி முதல் 12 லட்சத்து 90 ஆயிரம் கட்டண பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. இணையம் வாயிலாக கட்டணம் செலுத்தும் செயலி

-2019 அக்டோபர் தொடங்கி அரசாங்க செயலி வாயிலாக பல்வேறு கட்டணங்களைச்  செலுத்தும் சேவை – இணைய வங்கிச் சேவை உள்பட வெளிநாடுகளிலும் இந்த செயலியைப் பயன்படுத்த வாய்ப்பு  –  கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஏப்பள் ஏப்ஸ்டோர் வாயிலாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.

-மதிப்பீட்டு வரி, அபராதம், லைசென்ஸ், நிலவரி, நீர்,மின் கட்டணம், கைபேசி கட்டணம், ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் கட்டணம் ஆகியவற்றையும் செலுத்த இயலும்.

-சராசரி மற்றும் மந்தமான மாணவர்களுக்கு கூடுதல் வகுப்புகளை நடத்துவதற்கான வாய்ப்பு  –  மாதம் 2,000 வெள்ளிக்கு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். மாணவர்கள் இத்திட்டத்தில் இலக்காக கொள்ளப்படுவர்.


Pengarang :