ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நவம்பர் முதல் ஜனவரி வரை நாட்டில் அடைமழை-வெள்ளம் :வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

கோலாலம்பூர், அக் 12- பலத்த மழை சம்பந்தப்பட்ட நான்கு அத்தியாயங்கள் ஆண்டு இறுதியில் நாட்டில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இவ்வாண்டு நவம்பர் முதல் ஜனவரி வரையிலான வடக்கிழக்கு பருவ மழையின் தொடக்க காலத்தில் கடுமையான வெள்ளம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

2021/2022 ஆம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் தொடக்கத்தில் ஆரம்பமாகி 2022 மார்ச் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் முகமது ஹெல்மி  அப்துல்லா கூறினார்.

கிளந்தான், திரங்கானு, பகாங்கில் நவம்பர் முதல் டிசம்பர் வரை அடை மழை பெய்யும். டிசம்பர்  முதல் ஜனவரி வரை ஜொகூர், சபா மற்றும் சரவாவில் கடும் மழை பெய்யும் என்று அவர் சொன்னார்.

வரும் நவம்பர் மற்றும் டிசம்பரில் கிளந்தான் மற்றும் திரங்கானுவில் பெய்யும் மழையின் அளவு சராசரிக்கும் சற்று உயர்ந்து 450 மில்லி மீட்டர் முதல் 1,000 மில்லி மீட்டர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :