ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஷா ஆலம்  பஸ் முனையத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை

ஷா ஆலம், அக் 13– மாநில எல்லைகளைக் கடப்பதற்கான அனுமதி கடந்த திங்கள்கிழமை வழங்கப்பட்டது முதல் இங்குள்ள செக்சன் 17, விரைவு பஸ் முனையத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பயண டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.

கிழக்கு கரை மாநிலங்களுக்கு அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்ட வேளையில் வட மற்றும் தென் மாநிலங்களுக்கு கணிசமான அளவு டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக  ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வர்த்தக பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் 700 டிக்கெட்டுகள் வரை மட்டுமே விற்கப்பட்ட வேளையில் தற்போதைய விற்பனை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது என்று அவர் சொன்னார்.

அந்த பஸ் முனையத்திற்கு சிலாங்கூர் கினி நேற்று மாலை வருகை  மேற்கொண்ட போது அப்பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. பெரும்பாலான பயணிகள் காலை மற்றும் இரவு நேர பயணங்களை தேர்ந்தெடுத்ததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

பயணிகள் இரண்டு  டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும், உடல் உஷ்ணத்தை அளவிட வேண்டும், மைசெஜாத்ரா செயலியை ஸ்கேன் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை அந்த பஸ் முனைய நிர்வாகத்தினர் அமல்படுத்தியுள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் திறக்கப்பட்ட செக்சன் 17 பஸ் முனையம் ஒருங்கிணைந்த டிக்கெட் முறை, பயண தவல்களை காட்டும் மின்னியல் திரை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது.

 


Pengarang :