ECONOMYMEDIA STATEMENTNATIONAL

செக்சன் 7, பி.கே.என்.எஸ். அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு  இலவச குடிநீர்- மந்திரி புசார் வழங்கினார்

ஷா ஆலம், அக் 14- இங்குள்ள செக்சன் 7, பி.கே.என்.எஸ். அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு 500 குடிநீர் போத்தல்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

இந்த ஐந்து லிட்டர் குடிநீர் போத்தல்களை ஆயர் சிலாங்கூர் செ.பெர்ஹாட் நிறுவனம் வழங்கியது. மேலும், அப்பகுதி குடியிருப்பாளர்களின் வசதிக்காக 5,000 லிட்டர் நீர் டாங்கி ஒன்றும் அங்கு வைக்கப்பட்டது.

இந்த குடிநீர்  போத்தல்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேரடியாக குடியிருப்பார்களிடம் விநியோகித்தார். ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி சுஹாய்மி கமாருள்ஸமானும் அப்போது உடனிருந்தார்.

ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் மற்றும் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ் ஆகியோரும் உடனிருந்தனர்.

சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் இன்று மாலையில் முடிவுக்கு வரும் என்று அமிருடின் சொன்னார்.

தேசிய நீர் சேவை ஆணையத்தின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து  அந்த நீர் சுத்திகரிப்பு மையத்தில்  பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :