ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

காலை 9 மணி நிலவரப்படி 50.6 சதவீத இடங்களுக்கு நீர் விநியோகம் மீட்சிப்பெற்றது.

ஷா ஆலம், 15 அக்டோபர்: பெங்குருசான் ஆயிர் சிலாங்கூர் எஸ்.டி.என் பிஎச்டி (ஏர் சிலாங்கூர்) என்ற நீர் விநியோக நிறுவனம், நீர் குழாய் மேம்பாடு பணிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் 50.6 சதவீத இடம் சுத்தமான நீர் பெற இன்று காலை 9 மணி நிலவரப்படி எட்டியுள்ளது  என்றது.

ஆயிர் சிலாங்கூர்  அறிக்கைப்படி, ஷா ஆலம் 92.3 சதவீத இடம் சுத்தமான நீர் பெறுவதுடன் அதிக மீட்சியைப் பதிவுசெய்ததாகவும் உலு சிலாங்கூர் (89.3 சதவிகிதம்), கோலா சிலாங்கூரில் 75.6 சதவிகிதத்துடன் பெட்டாலிங் (73.3 சதவிகிதம்), கோம்பாக் 59.9  மற்றும் கிள்ளான் மாவட்டம் 7.1 சதவிகிதம்) மீட்சிப் பெற்றுள்ளதாகவும்,  கோலாலம்பூர் மற்றும் கோலா லங்காட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் வழங்கல் தொடர்ந்து மேம்பாடு அடைவதாகவும் கூறினார்.

ஆயிர் சிலாங்கூர், தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகு பயனீட்டாளர்களின் நீண்டகால வசதிக்காக, நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக சொத்துக்களை சீரமைக்கும் பணியை கடந்த புதன்கிழமை சுங்கை சிலாங்கூர் கட்டம் 1 (எஸ்எஸ்பி 1) சுத்திகரிப்பு நிலையத்தில் தொடங்கியது.

ஆலைக்கு அருகில் உள்ள பல பகுதிகளுக்கு நேற்று மாலை 7 மணிக்கு தண்ணீர் விநியோகம் தொடங்கியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பயனர்கள் தங்கள் வாழும் பகுதிகளில் நீர் விநியோகம் சரி செய்யப்பட்டு விட்டதா என்பதை hentitugas.airselangor.com என்ற இணையதளத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம் என்றது.


Pengarang :